அமெரிக்க – கனடா வர்த்தகப் பூசல் – அடுத்த பிரதமராகும் முயற்சியில் மூத்த அமைச்சர்
கனடாவின் ஆளும் மிதவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிட எண்ணுவதாக அரசாங்க மூத்த அமைச்சரான Chrystia Freeland தெரிவித்துள்ளார்.
கனடாவின் அடுத்த பிரதமராக விரும்புவதாகவும் அவர் தம்முடைய சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.
கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோகிட்டத்தட்ட பத்தாண்டுக்குப் பிறகு பதவி விலகினார்.
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland சென்ற மாதம் பதவி விலகினார்.
அவர் ட்ரூடோவை வெளிப்படையாகக் குறைகூறினார். டொனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கும்போது ட்ரூடோவால் சமாளிக்க முடியுமா என்று அவர் வினவினார்.
அமெரிக்க – கனடா வர்த்தகப் பூசல் அதிகரிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், டிரம்ப்புடன் Chrystia Freeland உறவு எப்படி இருக்கும் என்று தெளிவாகத் தெரியவில்லை.
(Visited 1 times, 2 visits today)