கனடாவின் – ஹாமில்டன் பகுதியில் பற்றி எரிந்த வீடு : ஒருவர் படுகாயம்!
கனடாவின் – ஹாமில்டன் பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த வீட்டிற்கு அருகில் இருந்து வீடும் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தின் விளைவாக, வீட்டின் தரைகள் மற்றும் கூரை இடிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட 02 மில்லியன் வரை சேதம் ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
தீயை அணைப்பதற்காக சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)