செய்தி வாழ்வியல்

கொய்யா இலை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

கொய்யா பழத்தில் இருப்பதை போல் அதன் இலைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

மேலும் பழங்களை விட அதன் இலைகளில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் சி, வைட்டமின் பி6,பாஸ்பரஸ் ,பொட்டாசியம் ,சோடியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொய்யா இலைகளை டீ போடும் முறை;
இளம் தளிர் கொய்யா இலைகள் ஐந்து எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் இலைகளை கிள்ளி போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டி இளம் சூட்டில் அருந்தி வர வேண்டும்.

கொய்யா இலை டீ குடிப்பதால் குணமாகும் நோய்கள்;
கொய்யா இலை டீ குடிப்பதனால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இந்த கொய்யா இலைகளை டீ போல் தயாரித்து தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் கணையத்தில் உள்ள செல்கள் தூண்டப்பட்டு இன்சுலின் சுரக்கப்படுகிறது.

மேலும் மாதவிடாயின் போது தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்படும் பெண்கள் இந்த டீயை அருந்தி வர நல்ல பலனை கொடுக்கும்.

தொண்டை புண் ,வாய்ப்புண் ,பல் ஈறு வீக்கம், பல்லில் ரத்த கசிவு போன்ற தொந்தரவு இருப்பவர்கள் தொடர்ந்து இந்த கொய்யா இலை டீயை குடித்து வருவது மட்டுமல்லாமல் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதில் வாய் கொப்பளித்து வர பல் ஈறு வலுவடையும்.

மேலும் இதில் உள்ள பாலிபினால் மற்றும் லைகோபின் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய், விதைப்பை புற்று நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இந்த கொய்யா இலை டீ யை உணவு சாப்பிட்ட பிறகு அரை கிளாஸ் வீதம் மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி