இலங்கையில் 100% பெண் பணியாளர்களைக் கொண்ட சுற்றுலா ஹோட்டல்
தெற்காசியாவின் சுற்றுலாத் துறையில் ஒரு திருப்புமுனையான நாட்டின் முதல் 100% பெண் பணியாளர்களைக் கொண்ட சுற்றுலா ஹோட்டலான “அம்பயாலு” பிரமாண்டமாக திறக்கப்பட்டது.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் அமைதியான கரையை ஒட்டிய ஒரு மா தோட்டத்தின் நடுவில்‘அம்பயாலுவோ’ ஹோட்டல் அமைந்துள்ளது.
தீமா கலெக்ஷன்” அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட இந்த ஹோட்டல், தூதரக அதிகாரிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கலகலப்பான விழாவுடன் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வின் கலாச்சார முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இரண்டு பெண் பௌத்த துறவிகள் ஹோட்டலுக்கும் அதன் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் ஆசீர்வாதமாக பிரித் பிரசங்கத்தை நடத்தினர்.
பழங்கால சினிமா அழகைப் பிரதிபலிக்கும் வகையில், பி. இளங்கரத்னவின் சிங்கள நாவலான ‘அம்ப யாலுவோ’ இன் பசுமை இங்கே பிரதிபலிக்கிறது.
ஹோட்டல் அதன் வடிவமைப்பின் ஒரு பகுதியாக பழைய திரையரங்கைக் கொண்டுள்ளது, சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் பழங்கால கேமரா உபகரணங்கள் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உணவகமே ரெட்ரோ சினிமாவைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, இது விருந்தினர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.