பணயக் கைதிகளை விடுவிக்காவிட்டால் காத்திருக்கும் ஆபத்து – ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக 20-ம் திகதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் அதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் மத்திய கிழக்கில் நரகமே வெடித்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாகக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளதாவது
“ஜனவரி 20ம் திகதிக்குள் அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது ஹமாஸுக்கு நல்லதாக இருக்காது உண்மையில் யாருக்கும் நல்லதாக இருக்காது. அனைத்து நரகமும் வெடித்துவிடும்.
இனி நான் சொல்ல வேண்டியதில்லை ஆனால் அதுதான். அவர்கள் நீண்ட காலத்திற்கு பணயக்கைதிகளை விடுவித்திருக்க வேண்டும். அக்டோபர் 7 (2022) இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடந்தியிருக்கக் கூடாது. அந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். ஆனால் மக்கள் அதை மறந்துவிடுகிறார்கள்.
இனி அவர்கள் பணயக்கைதிகள் அல்ல. இஸ்ரேலில் இருந்து வருபவர்கள் என்னிடம் கெஞ்சுகிறார்கள். எனது மகனின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? மகளின் உடலை நான் திரும்பப் பெற முடியுமா? என்று அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்.
அந்த அழகான பெண் அவளை ஹமாஸ் அமைப்பினர் உருளைக்கிழங்கு மூட்டை போல காரில் வீசினார்கள். அவளுக்கு என்ன ஆனது என்று நான் கேட்டதற்கு அவள் இறந்துவிட்டாள் என்றார்கள். 19 20 வயது உள்ள அழகான பெண் அவள்.
பேச்சுவார்த்தைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதேநேரத்தில் நான் பதவியேற்கும் முன் பணயக்கைதிகள் ஒப்படைக்கப்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால்மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும்” என்று எச்சரித்தார்