செய்தி வாழ்வியல்

மூளையை சுறுசுறுப்பாக்கும் உணவுகளும் பழக்கங்களும்

இன்றைய காலகட்டத்தில், பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், இளையவர்களுக்கு மறதி பிரச்சனை இருக்கிறது.

பிறரிடம் சொன்ன விஷயங்கள், நாம் செய்வதாக சொன்ன விஷயங்கள், ​​​​பொருட்களை வைத்த இடங்கள், செய்ய வேண்டிய வேலைகள் என எல்லாம் மறந்துவிடுவது பல சமயங்களில் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். மாணவர்கள் தேர்வுக்கு படிக்கும் சமயங்களில் ஞாபக மறதி இருந்தால், பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டு விடும்.

மறதி நோய் சிறிய விஷயங்களை மறந்துவிடுவதிலிருந்து தொடங்குகிறது. ஆனால், பின்னர் படிப்படியாக அதன் தீவிரம் அதிகரித்து, அதன் பிறகு அவர் பல முக்கியமான விஷயங்களை மறக்கத் தொடங்கும் நிலை உண்டாகலாம். இதன் காரணமாக அவர் எதிர்காலத்தில் பல வகையான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மன அழுத்தம் அல்லது எல்லாவற்றையும் பற்றி கவலைப்படுவது உள்ளிட்ட மனநலம் சார்ந்த காரணங்களால், ஒரு நபரின் மூளை சரியாக வேலை செய்யாமல் முக்கிய விஷயங்களை கூட மறக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், சில விஷயங்களை (Health Tips) மனதில் கொள்ள வேண்டும்.

உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது போல. இதுபோன்ற நோய்களில் இருந்து விடுபட, உங்கள் உணவில் சத்துள்ள உணவுகளை பயன்படுத்த உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். உணவு:

நமது மூளை சிறப்பாக செயல்பட நாம் உண்ணும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, ஒமேகா – 3 என்னும் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த உணவுகள், ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகள், இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளைக்கு உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். பாதாம், வாதுமை பருப்பு உள்ளிட்ட நட்ஸ், மீன்கள், பச்சை காய்கறிகள் உள்ளிட்டவற்றை இந்த டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பது, நமது மூளையையும் ஆக்டிவாக வைத்திருக்க உதவும். தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி போன்ற எளிய ஏரோபிக் பயிற்சிகள் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. புதிதாக ஏதேனும் ஒரு கலை அல்லது மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது கூட மறதி நோயை தடுக்க உதவும். எனவே, தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

கவலை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மன நிலைக்கு ஓய்வு கொடுங்கள். தியானம் செய்வது மனதிற்கு அமைதியை தருவதோடு, நமக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கவும் உதவும். பதற்றம் மற்றும் மன சோர்வையும் தியானம் குறைக்கும்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி