அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு! 7 மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிக பனிப் பொழிவுடனான கடும் குளிர் காலநிலை மேலும் பல மாநிலங்களைத் தாக்கியுள்ளது.
பெரும்பாதிப்பிற்கு உள்ளான 30 மாநிலங்களில் சிலவற்றில் கடுமையான காற்று மற்றும் இடியுடனான கடும் மழை பெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருவத்தில் சுழலினால் ஏற்பட்ட புயல் மத்திய அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கியுள்ளது.
ஆர்கன்சாஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட பல மாநிலங்கள் புயலை முன்னிட்டு அவசரகால நிலையைப் பிறப்பித்தன. வாஷிங்டன், டிசி ஞாயிறு பிற்பகல் நிலவரப்படி பனி அவசர எச்சரிக்கையின் கீழ் உள்ளது.
ஆயிரக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அதிக அளவிலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பெருந்தெருக்கள் சேதமடைந்ததனை அடுத்து போக்குவரத்துக்கள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை அமெரிக்காவின் கிழக்கு கரைநோக்கி புயல் நகரும் பட்சத்தில் காலநிலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் எனக் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக குறைந்தது மூன்று இறப்புகள் வார இறுதியில் பதிவாகியுள்ளன.
கன்சாஸில், இன்டர்ஸ்டேட் 235 இல் தெற்கு நோக்கிப் பயணித்த யுகோன் எஸ்யூவி கட்டுப்பாட்டை மீறிச் சுழன்றது என்று மாநில நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.