செய்தி விளையாட்டு

தொடர்நாயகன் விருதை வென்ற ஒன்மேன் ஆர்மி.. பும்ராவுக்கு கிடைத்த கவுரவம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்தது.

இந்த தொடரில் இந்திய அணி 1 – 3 என்ற மோசமான அளவில் தொடரை இழந்தது. ஆனால், தொடர் நாயகன் விருது இந்திய அணியின் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.

பொதுவாக தொடர் நாயகன் விருது என்பது வெற்றி பெற்ற அணியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும்.

உலகக்கோப்பை போன்ற சில தொடர்களில் மட்டுமே தொடர் நாயகன் விருது கோப்பை வென்ற அணியையும் தாண்டி சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு வழங்கப்படும்.

ஆனால், இரு அணிகள் பங்கேற்கும் தொடர்களில் பெரும்பாலும் வெற்றி பெற்ற அணியை சேர்ந்தவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படும்.

இந்த நிலையில், இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் அல்லது துணை கேப்டன் ட்ராவிஸ் ஹெட்டுக்கு தொடர் நாயகன் விருதை அளிக்காமல் பும்ராவுக்கு அளித்திருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களை வியப்பில ஆழ்த்தி உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி மோசமாக ஆடி தோல்விகளை சந்தித்த போதும் தலைசிறந்த பந்துவீச்சை வெவெளிப்படுத்தினார் பும்ரா.

அவரது கிரிக்கெட் வாழ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சை அவர் வெளிப்படுத்தினார் என்பதே உண்மை.

ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 9 இன்னிங்க்ஸ்களில் மட்டும் பந்து வீசி 32 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதிலும் ஐந்தாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் பத்து ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் முதுகு வலியால் அதன் பின் பந்து வீசவில்லை.

அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் பந்து வீசவில்லை.

இந்த இரண்டு இன்னிங்ஸிலும் அவர் முழுமையாக பந்து வீசி இருந்தால் மேலும் 5 முதல் 10 விக்கெட்கள் வரை அவருக்கு கிடைத்திருக்கும்.

மேலும், அவரது பவுலிங் சராசரி மற்றும் பவுலிங் ஆவரேஜ் இந்த தொடரில் நம்ப முடியாததாக இருந்தது. இந்த தொடரில் 9 இன்னிங்ஸ்களில் பந்து வீசிய பும்ராவின் பவுலிங் சராசரி 13.06 என்பதாக இருந்தது.

அவரது எக்கனாமி ஒரு ஓவருக்கு சராசரியாக 2.76 என்பதாக இருந்தது. பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் 28.37 என்பதாக இருந்தது.

மற்ற எந்த பவுலரை விடவும் மிக சிறப்பான பவுலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து இருந்தார் பும்ரா.

மேலும், இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராகவும் இருந்தார். ஆஸ்திரேலியாவின் கேப்டன் கம்மின்ஸ் 10 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுத்து 159 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கும் கூட தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்கலாம்.

அதே போல, பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ட்ராவிஸ் ஹெட் 448 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன் சேர்த்த வீரராக இருந்தார்.

மேலும், இந்த தொடரில் 56 என்ற பேட்டிங் சராசரியை வைத்திருந்தார். இந்த தொடரில் 50க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை வைத்திருந்த ஒரே பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே. அவருக்கும் கூட தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்கலாம்.

ஆனால் அவர்கள் இருவரை விடவும் தனி ஆளாக இந்திய அணியை சுமந்த பும்ராவை பாராட்டும் வகையில் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

(Visited 34 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி