ஆஸ்திரேலியாவில் 28 வயதான இளைஞர் மாயம் : இறுதியில் நேர்ந்த துயரம்!

ஆஸ்திரேலியாவில் மாயமான 28 வயதான நபர் சுறாவின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான சர்ஃப் கடற்கரையில் அவர் இறுதியாக அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு குறித்த நபர் வெள்ளை சுறாவால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவசர உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறினார்.
1791 முதல் 27 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டில் 255 அபாயகரமான சுறா தாக்குதல் பதிவாகியுள்ளமை குறிப்படத்தக்கது.
(Visited 24 times, 1 visits today)