ஆஸ்திரேலியா விமானக் குழு உறுப்பினர் பாலியல் வன்கொடுமை ; ஃபிஜி அதிகாரிகள் விசாரணை
வெர்ஜின் ஆஸ்திரேலியா விமானச் சேவையின் ஊழியர்கள் இருவர் ஃபிஜியில் புத்தாண்டு நாள் அதிகாலை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.அவர்களது உடைமைகளும் திருடப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக ஃபிஜி காவல்துறை ஜனவரி 2ஆம் திகதியன்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட விமானச் ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க ஃபிஜிக்கு ஆட்களை அனுப்பியுள்ளதாக வெர்ஜின் விமானச் சேவை நிறுவனம் கூறியது.
சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.
ஃபிஜியில் உள்ள இரவு விடுதிக்கு வெர்ஜின் ஆஸ்திரேலியாவின் விமானச் உயிழர்கள் சிலர் சென்றிருந்ததாக ஃபிஜி காவல்துறை கூறியது.
அவர்களில் இருவர் இரவு விடுதியிலிருந்து வெளியேறி தங்கள் ஹோட்டலுக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 2 times, 1 visits today)