நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கும் இங்கிலாந்து!
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உறுதி செய்துள்ளார்.
இதன்படி Storm Shadows என அழைக்கப்படும் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கப்படும் என்று அவர் ஊறுதியளித்துள்ளார்.
உக்ரைன் நீண்ட காலமாக இத்தகைய ஆயுதங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது, ஆனால் அமெரிக்காவும் பிற நாடுகளும் ரஷ்யாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலும், அவற்றை வழங்க தயாராக இல்லை.
இந்நிலையிலேயே இங்கிலாந்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த ஏவுகணைகள் கிட்டத்தட்ட 200 மைல்கள் (300 கிமீ) தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஏவுகணை 1.3 டன் எடையும் 5 மீட்டர் நீளமும் கொண்டது. இது காற்றில் இருந்து ஏவப்படுகிறது, மேலும் கோட்பாட்டில் உக்ரைனின் சோவியத் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களில் இருந்து பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.