இலங்கை – சிவனொளிபாதமலையை பார்வையிட்டு திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி!
இலங்கை – மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கெப் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கெப் வண்டியில் வந்தவர்கள் நேற்றைய தினம் சிவனொளிபாதமலையை பார்வையிட்டு கொடகல நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்த.
விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் குழுவொன்று இந்த வண்டியில் பயணித்துள்ளதுடன், ஏழு பேர் வண்டியில் பயணித்துள்ளனர்.
அவர்களில் ஐவர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வண்டியில் பயணித்த சிறு குழந்தை மற்றும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கெப் வண்டியின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், விபத்தில் கெப் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.