72 பேருடன் பயணித்த விமானம் : தரையிறக்கும்போது ஏற்பட்ட விபத்து – பலி எண்ணிக்கை தொடர்பில் அச்சம்!
கஜகஸ்தானில் இடம்பெற்ற விமான விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
72 பேருடன் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் 67 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் அஜர்பைஜானில் உள்ள பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது, ஆனால் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)