யுக்ரேன் மீது பேரழிவு தாக்குதலை ரஷ்யா நடத்தலாம் என அச்சம்
கசான் பிரதேசத்தில் 8 டிரோன் விமானங்கள் மூலம் யுக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக பயங்கரமான பதிலடியை வழங்கப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை செய்துள்ளார்.
எந்த ஒரு நாடும் தனது நாட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் இதனை விட இரட்டிப்பு மடங்கு அழிவுளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கசான் நகர சேதங்கள் சரி செய்யப்பட்டு மிக விரைவில் வழமையான நிலைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ள அவர் யுக்ரேனின் தாக்குதலுக்கு மறக்க முடியாத பதிலடி வழங்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதே வேளை யுக்ரேன் மீது மிகவும் பயங்கரமாக அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல் ஒன்றை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக சர்வதேச போர் ஆய்வு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 1 visits today)