ஆபிரிக்க நாடான மாலியில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பலி
ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கிராமங்களுக்குள் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்கள் புகுந்து அங்கு இருந்த அனைத்தையும் அடித்து நொறுக்கி வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் தீமூட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்காரர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் கிராமங்களுக்குள் சென்றதாக அறியப்படுகிறது.
கிராமங்களில் இருந்த பலரை அவர்கள் கொன்று அவ்விடங்களை அழித்தனர்.
இத்தாக்குதல் குறித்து மாலியை ஆட்சி செய்யும் ராணுவம் கருத்துரைக்கவில்லை.
அல் கய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளுடன் மாலி ராணுவம் போரிட்டு வருகிறது.
(Visited 4 times, 4 visits today)