சீனா விமர்சகர் ஜார்ஜ் கிளாஸை ஜப்பான் தூதராக தேர்வு செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ஜப்பானுக்கான தனது தூதராக பணியாற்றுவதற்காக முன்னாள் இராஜதந்திரி மற்றும் முதலீட்டு வங்கியாளரான ஜார்ஜ் கிளாஸைத் தேர்வு செய்வதாக தெரிவித்தார்.
“எனது முதல் காலத்தில், ஜார்ஜ் போர்ச்சுகலுக்கான அமெரிக்க தூதராக இருந்தார். ஒரு முதலீட்டு வங்கியின் முன்னாள் தலைவராக, ஜார்ஜ் தனது வணிக புத்திசாலித்தனத்தை தூதர் பதவிக்கு கொண்டு வருவார்” என்று டிரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டியவர் கிளாஸ், ஓரிகானைச் சேர்ந்த தொழிலதிபர். அவர் 2017 மற்றும் 2021 க்கு இடையில் போர்ச்சுகலுக்கு தூதராக பணியாற்றினார்.
(Visited 2 times, 1 visits today)