வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை!
பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு தரவுகளின்படி, நிலநடுக்கம் 57 கிமீ ஆழமான கடலில் இருந்து உருவானது.
எனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலியர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு வனுவாட்டு அரசாங்க இணையதளங்கள் செயலிழந்தன மற்றும் வனுவாட்டுவின் சில கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
80 தீவுகளைக் கொண்ட வனுவாட்டுவில் சுமார் 330,000 மக்கள் வாழ்கின்றனர்.