காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீட்டில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 19 பேர் பலி!

வடக்கு காசா பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கமல் அத்வான் மருத்துவமனையின் கூற்றுப்படி, பெய்ட் லாஹியா நகரில் இரவு நேரத்தில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை. அக்டோபர் தொடக்கத்தில் இருந்து வடக்கு காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை நடத்தி வருகிறது.
நான்கு குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் இரண்டு தாத்தா பாட்டி உட்பட எட்டு பேர் கொண்ட குடும்பம் ஒன்று கொல்லப்பட்டதாக மருத்துவமனை பதிவுகள் காட்டுகின்றன.
(Visited 18 times, 1 visits today)