நடை பயிற்சியில் 6- 6- 6 நடைமுறை – உடலில் ஏற்படும் மாற்றம்
நடை பயிற்சி மேற்கொள்வது சற்று எளிமையானது என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், பலருக்கு இதற்கான நேரம் இருக்காது. இந்நிலையில், 6- 6- 6 என்ற நடைமுறை, நடை பயிற்சியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கமளித்துள்ளார்.
இது மூன்று வகைகளாக பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 60 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டுமனவும், நடை பயிற்சிக்கு முன்பும் பின்பும் வார்ம் அப் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையில், வாரத்தில் 6 நாள்கள், 6 கிலோமீட்டர், 6 கி.மீ வேகத்தில் நடை பயிற்சி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, ஒரு நாளைக்கு 6 முறை நடக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் 6 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதில் மற்ற இரண்டு முறைகளுக்கு நேரம் அதிகமாக தேவைப்படும் நிலையில், மூன்றாவது முறையில் அவ்வளவு நேரம் தேவை இல்லை என்பதால் எல்லோராலும் எளிதாக செய்ய முடியும் என்று மருத்துவர் அருண்குமார் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.