பிரான்சில் ஈழத்தமிழர் சுட்டுக் கொலை
பாரிஸின் புறநகர் பகுதியான லாகூர்நெவில் கடந்தவாரம் இனந்தெரியாத நபர் ஒருவரால் 29 வயதான தனுசன் என்ற ஈழத்தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொலைக்குரிய காரணத்தை அறிவதற்கான தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை (06) முதுகில் சுடப்பட்டுகொல்லப்பட்ட 29 வயதான தனுசனின் கொலைக்குரிய காரணங்கள் தெளிவாக தெரியவில்லை என தெரிவித்துள்ள காவல்துறை சிறிய ரக தோட்டாவால் குறித்த நபர் கொல்லப்பட்டமைக்கான நோக்கம் மர்மமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் தனுசன் தனது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், நண்பர் அங்கிருந்து அகன்றபோது நிலையில் தனுசனின் முதுகுபபக்கமாக சுடப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 36 times, 1 visits today)





