இந்தோனேசியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் மீட்பு!
இந்தோனேசியாவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாகவும், இருவர் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் பெய்த மழை மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபுமி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட வழிவகுத்தது.
இதில் சுமார் 170 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும் பல வீடுகள் மண்ணுள் புதையுண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பேரழிவுகள் 31 பாலங்கள், 81 சாலைகள் மற்றும் 539 ஹெக்டேர் (1,332 ஏக்கர்) நெல் வயல்களையும் அழித்ததாக கூறப்படுகிறது.
1,170 வீடுகள் கூரை வரை வெள்ளத்தில் மூழ்கின. தீவிர வானிலை 3,300 க்கும் மேற்பட்ட பிற வீடுகள் மற்றும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியுள்ளது என்று உள்ளூர் பேரழிவு மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)