மத்திய கிழக்கு

சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படை! ஜனாதிபதி தப்பியோட்டம்

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் டமாஸ்கஸில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரிய கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் தலைநகருக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்தது.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் இராணுவத்துடன் மீண்டும் சண்டையைத் தொடங்கியுள்ளனர்.

ஆசாதின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரச் சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில், இராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

இந்த நிலையில், தாம் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்க்குள் நுழைந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, டமாஸ்கஸின் மோவாதமியா அல்-ஷாம் மற்றும் தரயா உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதிகளிலிருந்தும், மிஜ்ஜே இராணுவ விமான நிலையத்திலிருந்தும் கூட அரசுப் படைகள் திரும்பப்பெறப்பட்டு விட்டன எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!