தென் கொரியாவில் இராணுவ சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி : அவசரநிலை பிரகடனம்!
தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் யோல் இன்று (03.12) அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
வரவு செலவுதிட்ட மசோதா தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள விவாதத்தின்போது “கம்யூனிச சக்திகளிடமிருந்து” நாட்டைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நேரலையில் உரையாற்றிய அவர், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தாராளவாத தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
“நமது தேசிய சட்டமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாகவும், சட்டமியற்றும் சர்வாதிகாரத்தின் குகையாகவும் மாறியுள்ளது, இது நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்புகளை முடக்கி நமது தாராளவாத ஜனநாயக ஒழுங்கை கவிழ்க்க முயல்கிறது” என்று யூன் கூறினார்.
யூனின் மக்கள் சக்தி கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட மசோதா தொடர்பாக தொடர்ந்து சண்டையிட்டு வரும் நிலையில் இந்த ஆச்சரியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.