ஸ்காட்லாந்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 132 ஆண்டு பழைமையான போத்தல் : மறைத்துவைக்கப்பட்டிருந்த செய்தி!
தெற்கு ஸ்காட்லாந்தில் உள்ள கலங்கரை விளக்கத்தின் சுவர்களுக்கு இடையில் 132 ஆண்டுகள் பழைமையான போத்தல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ரைன்ஸ் ஆஃப் காலோவேயின் வடக்கு முனையில் அமைந்துள்ள கோர்ஸ்வால் லைட்ஹவுஸில் இந்த போத்தல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போத்தலுக்குள் செப்டம்பர் 4, 1892 என திகதியிடப்பட்ட செய்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் 100 அடி (30 மீட்டர்) கோபுரத்தில் புதிய வகை விளக்குகளை நிறுவிய மூன்று பொறியாளர்களின் பெயர்கள், கலங்கரை விளக்கத்தின் மூன்று காவலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேம்ஸ் வெல்ஸ் இன்ஜினியர், ஜான் வெஸ்ட்வுட் மில்ரைட், ஜேம்ஸ் பிராடி இன்ஜினியர், டேவிட் ஸ்காட் லேபர், ஜேம்ஸ் மில்னே அண்ட் சன் இன்ஜினியர்ஸ், மில்டன் ஹவுஸ் ஒர்க்ஸ், எடின்பர்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வெல்ஸ் இன்ஜினியர் ஆகியோரால் மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் இந்த விளக்கு அமைக்கப்பட்டு, வியாழன் 15ஆம் தேதி இரவு விளக்கேற்றப்பட்டதாக அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.