கடுமையான பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள தென்கொரிய மக்கள் : ஐவர் பலி!
தென்கொரியாவில் இன்று (28.11) நாளாக பனிப்புயல் மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில் பல இரயில் மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 05 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1907 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து, தலைநகரான சியோலில் மூன்றாவது முறையாக பனிப்பொழிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சியோலின் சில பகுதிகளில் 40 செமீ (16 அங்குலம்)க்கும் அதிகமான பனி குவிந்தது, இதனால் 140க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)