ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம் : மீறினால் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம்!
16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பதைத் தடைசெய்யும் உலகின் முதல் சட்டம் ஆஸ்திரேலியாவில் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் நவம்பர் 2025 இல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த சட்டமானது உலகின் கடினமான சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் சிலவற்றை உள்ளடக்கியது. அத்துடன் வயது சரிபார்ப்பு பாதுகாப்புகள் நடைமுறையில் இருப்பதை உறுதிசெய்ய நியாயமான நடவடிக்கைகளை எடுக்க தளங்களை கட்டாயப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டோக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், ரெடிட் மற்றும் எக்ஸ் போன்ற தளங்கள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை முறையாக கணக்கு வைத்திருப்பதைத் தடுக்கவில்லை என்றால், 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (£25 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படும்.
செப்டம்பரில், பிரதம மந்திரி Anthony Albanese, தனது அரசாங்கம் சமூக ஊடக கணக்குகளைத் திறப்பதைத் தடைசெய்யும் முன் வயது சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை சோதனை செய்யும் என்று கூறினார்.
இதற்கமைய குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.