இந்திய விமானங்களுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் : நாடாளுமன்றத்தில் விளக்களமித்துள்ள அமைச்சர்!
ஆகஸ்ட் 2022 மற்றும் நவம்பர் 13இற்கு இடையில் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு 1,143 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் 994 மிரட்டல்கள் இவ்வருடத்தில் கிடைக்கப்பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் (MoS) முரளிதர் மொஹோல், “2022 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 27 போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. 2023 இல் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்தது. , நடப்பு ஆண்டில் மட்டும் 2024 நவம்பர் நடுப்பகுதியில் 994 அழைப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக புரளி அச்சுறுத்தல்கள் தற்செயலான நிலையங்களில் இருந்து வந்தவை என்றும் குறிப்பிட்ட இடங்களிலிருந்து அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.