இரு துருவங்களான நயன் – தனுஷ் ஒரே மேடையில் இருக்கும் படங்கள் வைரல்….
‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, அனிருத், என பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் வீட்டில் விசேசம் என்றால் தனுஷ் வராமல் இருப்பாரா. முதல் ஆளாக வந்து முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அண்மையில் பிறந்தநாளை சர்ச்சையுடன் கொண்டாடி, தனுசுடன் சண்டையை ஆரம்பித்த நயன்தாராவும் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு முன் வரிசையில் அமர்ந்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக இருக்கும் தனுஷ் – நயன்தாரா சண்டைக்கு பிறகு கலந்துகொள்ளும் முதல் விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் வீடியோ, பகைப்படங்கள் வைரலாகத்தொடங்கியுள்ளன.

மேலும் இருவரும் குறித்த நிகழ்வில் கதைத்துக்கொள்ளவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.






