பேரழிவின் விளிம்பில் பூமி : 30 மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்பு!
பருவநிலை மாற்றம் 2100ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியன் மக்களின் உயிரை எப்படிப் பறிக்கப் போகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு, காற்று மாசுபாடு மற்றும் தீவிர வெப்பநிலை காரணமாக ஏற்படும் இறப்புகளை மதிப்பிட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியானது “பேரழிவு” 3.1C வெப்பமயமாதலுக்கான பாதையில் செல்கிறது என்று சமீபத்திய ஐ.நா அறிக்கை எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த ஆய்வு வந்துள்ளது.
2000 முதல் 2090 வரையிலான கணிப்புகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளனர்.
கண்டுபிடிப்புகள் காலநிலை தொடர்பான இறப்புகளில் குறிப்பிடத்தக்க பிராந்திய மாறுபாடுகளை எடுத்துக்காட்டுகின்றன. தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவையும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உட்பட இந்தப் பிராந்தியங்களுக்குள் உள்ள சில நாடுகளில் வெப்பநிலையின் அதிகரிப்பு ஏற்கனவே பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கூட்டிக்காட்டியுள்ளனர்.
ஆய்வுக் குழுவின் தலைவரான டாக்டர் ஆண்ட்ரியா போஸர், “2000 ஆம் ஆண்டில், குளிர் மற்றும் வெப்பம் ஆகிய இரண்டின் தீவிர வெப்பநிலை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றாண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 10.8 மில்லியனாக ஏழு மடங்க அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.