இலங்கை

இலங்கை: எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த அர்ச்சுனா: நாடாளுமன்ற ஊழியர்களுடன் வாக்குவாதம்

சர்ச்சைக்குரிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் புதிய பாராளுமன்றத்தின் முதல் நாள் பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தார்.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் 2024 பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில், வைத்தியர் அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரது ஆசனத்தில் சென்று அமர்ந்துள்ளார். உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், புதிய பாராளுமன்றத்தின் முதல் நாளில் ஆசன ஏற்பாடுகள் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய எம்.பி., “நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றியுள்ளோம்” எனக் கூறி, தனது இருக்கையில் இருந்து நகர மறுத்தார்.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!