இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் எதிர்கட்சி தலைவர் சரச்சை – சஜித்திற்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு மேலும் பல ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சவாலை முன்வைக்க முடியாது என அந்த உறுப்பினர்கள் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எண்ணுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்ததையடுத்து, அந்த வெற்றிடத்திற்காக ணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பிரவேசிக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை