இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அநுர தலைமையில் புதிய அமைச்சரவை சற்று முன்னர் நியமனம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

01. பிரதமர் ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

02. விஜித ஹேரத் – வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

03. பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

04. சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்

05. சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்

07. அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் 

08. ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் 

09. பேராசிரியர் உபாலி பன்னலகே – கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்

10. சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

11. ஆனந்த விஜேபால – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

12. பிமல் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

13. பேராசிரியர் சுனில் செனவி – புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்

14. நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்

15. சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்

16. சுனில் குமார் கமகே – இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

17. வசந்த சமரசிங்க – வர்த்தக, வணி, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

18. பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்

19. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சர்

20. பொறியாளர் குமார் ஜெயக்கொடி – எரிசக்தி அமைச்சர்

21. வைத்திய தம்மிக்க பட்டபெந்தி – சுற்றுச்சூழல் அமைச்சர்

(Visited 30 times, 37 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி