ஆஸ்திரேலிய விமான இயந்திரத்துக்குள் சிக்கிய கருவியுடன் 294 மணி நேரம் பறந்த விமானம்
ஆஸ்திரேலியாவின் Qantas நிறுவனத்தின் A380 ரக விமானம் நூற்றுக்கணக்கான மணி நேரம் பறந்த பிறகு அதன் இயந்திரத்துக்குள் கருவி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு நடத்திய விசாரணையில் அந்த விடயம் தெரியவந்தது.
1.25 மீட்டர் நீளம் கொண்ட நைலான் (nylon) கருவி ஒன்று இயந்திரத்தில் சிக்கிக்கொண்டிருந்தது பராமரிப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
பராமரிப்புச் சோதனைகளின்போது அந்தப் பொருளைப் பொறியாளர் தவறுதலாக இயந்திரத்தில் விட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதே நிலையில் விமானம் மொத்தம் 294 மணி நேரம் பயணம் செய்திருக்கிறது.
இயந்திரத்தில் சிக்கிய பொருள் விமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று விசாரணை அறிக்கை சொல்லிற்று.
(Visited 3 times, 3 visits today)