இலங்கை: ஹரிணியின் சாதனையை முறியடித்த விஜித ஹேரத்! பிரதமர் பதவி யாருக்கு?
அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹாவில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்,
இது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் பெற்ற 655,289 வாக்குகளை விட ஒரு பாராளுமன்ற வேட்பாளரின் அதிகபட்ச விருப்பு வாக்குகள் ஆகும்
அரசியலமைப்பின் 43(3) உறுப்புரைப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் ஆதரவு உள்ளவரை ஜனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்வார்.
இந்நிலையில் நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பெற்ற விருப்பு வாக்குகளை விட அமைச்சர் விஜித ஹேரத் அதிகூடிய வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்,
எனவே புதிய அரசாங்கத்தில் யார் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேர்தலுக்குப் பின், புதிய நாடாளுமன்றம் 2024 நவம்பர் 21 இல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது