உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு! எங்கு இருக்கிறது தெரியுமா?
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,
ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சிமாநாட்டான COP29 க்காக உலகத் தலைவர்கள் அஜர்பைஜானின் பாகுவில் கூடும் போது இந்த கண்டுபிடிப்பு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது .
மேலும் இந்த பாரிய உயிரினம் விண்வெளியில் இருந்து தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சாலமன் தீவுகளுக்கு அருகிலுள்ள “மெகா பவளம்”, சுமார் 300 ஆண்டுகள் பழமையானது மற்றும் 105 அடி நீளமும் 111 அடி அகலமும் கொண்டதாக நம்பப்படுகிறது,
கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பவளப்பாறைகள் பெரும் பங்காற்றுகின்றன. இது “இறால் மற்றும் நண்டுகள் முதல் மீன்கள் வரையிலான பல்வேறு வகையான உயிரினங்களுக்கு அத்தியாவசிய வாழ்விடம், தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை வழங்குகிறது” என்று அறிக்கை கூறுகிறது.
நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்வாளரும், ப்ரிஸ்டைன் சீஸின் நிறுவனருமான என்ரிக் சாலா ஒரு அறிக்கையில், “உலகின் மிக உயரமான மரத்தைக் கண்டறிவது போன்ற ஒரு குறிப்பிடத்தக்க அறிவியல் கண்டுபிடிப்பு” என்று கூறினார், ஆனால் “இந்த பவளம் புவி வெப்பமடைதல் மற்றும் பிற மனித அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இல்லை” என்று எச்சரித்துள்ளார்.