தென் அமெரிக்கா

ஈக்வடாரில் சிறைக்கைதிகள் இடையே மோதல்; 15 பேர் பலி !

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடாரில் மிகப்பெரிய சிறைச்சாலை கவ்யாஹுலி நகரில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் இன்று அதிகாலை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைதிகள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாதுகாப்புப்படையினர் மோதலை தடுத்து நிறுத்தினர். மேலும், இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈக்வடாரில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைச்சாலைகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 400க்கும் மேற்பட்ட கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
See also  பிரேசிலில் உச்ச நீதிமன்றம் அருகே குண்டுவெடிப்பு; ஒருவர் மரணம்!
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content