வட அமெரிக்கா

உக்ரேன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் உக்ரேன் விவகாரம் குறித்து தொலைபேசியில் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் ஜோ பைடன், உக்ரேனைக் கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ள வேளையில் இரு தலைவர்களும் கலந்துரையாடியதாகச் சொல்லப்படுகிறது.

புட்டினுடன் பேசும்போது உக்ரேனியப் போரை மேலும் விரிவுபடுத்த வேண்டாம் என்று டிரம்ப் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.நவம்பர் 6ஆம் திகதி உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியிடமும் டிரம்ப் பேசியுள்ளார்.

உக்ரேனுக்கு அளவுக்கு அதிகமாக ராணுவ மற்றும் நிதியாதரவு வழங்குவதை டிரம்ப் விரும்பவில்லை.ரஷ்ய-உக்ரேன் போருக்கு முடிவு கட்டப்போவதாக் கூறியுள்ள அவர், எப்போது, எப்படி என்பதைத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் டிரம்ப்-புட்டின் பேச்சு குறித்து முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை என்று உக்ரேனிய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது. ஆனால் அதனை உக்ரேன் ஆதரிக்கவோ, ஆட்சேபிக்கவோ இல்லை.

வாஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம், உடனடியாக டிரம்ப்-புட்டின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிசை தோல்வி அடையச் செய்து அமோக வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் திதி அதிகாரபூர்வமாக அதிபர் பொறுப்பை ஏற்கிறார்.

ஆட்சி, அதிகாரத்தை சுமூகமாக ஒப்படைக்கப் போவதாக பைடன் உறுதி கூறியுள்ளார்.அதோடு ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து டிரம்ப்பிடம் பைடன் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 38 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்