கிழக்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 57 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கிழக்கு லெபனானில் உள்ள ஹெர்மல் பகுதியில் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில், வரலாற்று சிறப்புமிக்க ‘அல்-மான்ஷியா’ கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.