அமெரிக்க தேர்தலில் தோல்வி! ஆதரவாளர்களிடம் பேச தயாராகும் கமலா ஹாரிஸ்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாகியுள்ளார்.
தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
இது இவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கான வெற்றியாளர் ட்ரம்ப் என அறிவித்தபோது கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் கண்கலங்கி அழுதார்கள்.
தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், கமலா ஹாரிஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூட எந்த பதிவும் பதிவு செய்யவில்லை.
தோல்வி குறித்தும் ஆதரவாளர்களுக்கு எதாவது சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து இன்னும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசவில்லை.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் எப்போது ஆதரவாளர்களிடம் பேசப்போகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் கமலா ஹாரிஸ் தனது அல்மா மேட்டரான ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் பேசுவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால்,அமெரிக்க நிறுவனம் வெளியிட்டு வரும் தகவலின் படி அவர் இன்று ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் வைத்துத் தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாகவே, தேர்தலில் வெற்றிபெற்றால் நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் மகிழ்ச்சியாகப் பேசத் திட்டமிட்டு இருந்துள்ளார்.
ஆனால், டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று ஒட்டுமொத்தமாக இந்த திட்டமே வீணாகிவிட்டதால் இன்று பொறுமையாகப் பேச கமலா ஹாரிஸ் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.