டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தில் எலோன் மஸ்க் இணைவாரா? மஸ்க்கை புதிய நட்சத்திரம் என வர்ணித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய உரையில் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளருமான இலான் மஸ்க்கை குடியரசுக் கட்சியின் “புதிய நட்சத்திரம்” என டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
அத்தோடு, அவர் ஒரு “அற்புதமான” பையன் என்றும் ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
தேர்தலில் நாகரிகத்தின் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதாகக் கூறி, தேர்தலுக்கு முன்னதாக, ட்ரம்ப்பிற்கான தனது ஆதரவைப் பற்றி நூற்றுக்கணக்கான மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு மஸ்க் இடைவிடாமல் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றதும் புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும்.
எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க எலான் மஸ்க்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.
எனவே டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகத்தில் எலோன் மஸ்க் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.