அமெரிக்க தேர்தல் முடிவுகள் நிதிச் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் : USD பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளுடன் நிதிச் சந்தைகள் நம்பிக்கையுடன் இருப்பதாக ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன.
USD/GBP பரிவர்த்தனை விகிதம், கடந்த ஏழு மணி நேரத்தில் 1.7% அதிகரிப்பை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நாணய ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களின் உணர்வையும், தேர்தல் முடிவுகளின் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கின்றன.
ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் கருவூல வருவாயில் கூர்மையான அதிகரிப்பை காட்டியுள்ளதாக bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)