ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத சின்னங்களை பயன்படுத்திய ஆர்ப்பாட்டகாரர்கள்: 14 பேர் அதிரடியாக கைது!
ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிஸ்புல்லா கொடிகள் பறக்கவிடப்பட்டதாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் தனது விசாரணையை புதுப்பித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதச் சின்னங்களைக் காண்பித்தது தொடர்பாக 14 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
90 மணிநேர சிசிடிவி ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் செனட் மதிப்பீடுகளின் விசாரணையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் “காசாவுக்கான தேசிய நடவடிக்கை தினத்தில்” ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஹிஸ்புல்லா கொடிகள் பறக்கவிடப்பட்டது யூத குழுக்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே விசாரணைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.