தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை முதல் ஆளாக பார்த்த பிரபலம்
நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக, இவரே இயக்கி – நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் வெளியானது. தனுஷின் 50-ஆவது திரைப்படமாக வெளியான இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது.
இந்த படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய அக்கா மகனை, ஹீரோவாக வைத்து இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்’.
இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, தனுஷ் தற்போது ‘இட்லி கடை’ படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இசை கோர்ப்பு பணிகள் துவங்குவதற்கு முன்,தனுஷ் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ‘இட்லி கடை’ படத்தின் 40 நிமிட காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். இதை பார்த்து விட்டு தான் ஜிவி பிரகாஷ் குமார் இட்லி கடை படம் குறித்த தன்னுடைய முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஜிவி பிரகாஷ் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷ் இந்த படத்தின் முக்கிய அம்சமாக எமோஷனை கதைக்குள் புகுத்தி எடுத்துள்ளார். எனவே திருச்சிற்றம்படம் போலவே இந்த படமும் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் விதத்தில் இருக்கும்.
இதற்கு முன் அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நான் தனுஷ் உடன் பணியாற்றி இருந்தாலும், ‘இட்லி கடை’ திரைப்படம் முழுக்க முழுக்க ரூரல் கதைகளத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷின் கேரக்டர் மிகவும் அருமையாக உள்ளது என ஜி வி பிரகாஷ் தன்னுடைய முதல் விமர்சனத்தை கூறி படம் மீதான ஆவலை அதிகரிக்க செய்துள்ளார்.