நியூசிலாந்தில் பள்ளிவாசல் ஒன்றிற்கு தீ வைப்பு – பொலிஸார் விசாரணை!
நியூசிலாந்துக் காவல்துறை ஆக்லாந்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அதிகாலையில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கிறது.
கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்குப் பெரிதாக தீப்பிழம்புகளின்றி வெறும் புகை மட்டுமே வந்துகொண்டிருந்ததாகவும் அதன் பின்னரே தீ குறித்துத் தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.அதன்பின் அவசரகால சேவைப் பிரிவினருக்குத் தகவல் தரப்பட்டது.
கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் இமாம் ரெஸா பள்ளிவாசலில் அதிகாலை 1 மணிக்கு முன்னதாக யாரோ புகுந்து வேண்டுமென்றே தீ மூட்டியது தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.
தாக்குதல்காரரின் நோக்கம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.
இது அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்று பள்ளிவாசல் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு முஸ்லிம்களைக் குறிவைத்து கிரைஸ்ட்சர்ச் நகரப் பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 51 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்காகப் பள்ளிவாசலில் கூடியிருந்தவர்கள். துப்பாக்கிக்காரர் பிரென்டன் டாரன்ட் தனது தாக்குதலை நேரலையாக ஒளிபரப்பினார்.