நாளுக்கு நாள் எகிறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.. அமரனின் ஆட்டம் ஆரம்பம்
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரது காதல் மனைவி இந்து ரெபேகா வர்கிஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அமரன். இப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனது.
அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கான புக்கிங் ஓபன் ஆனதில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடப்பாண்டில் இதுவரை வெளியான படங்களிலேயே, புக் மை ஷோ பக்கத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையப் பெற்றது. படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றது.
படம் ஏற்கனவே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்ததால், தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், வெளிமாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதல் நாளில் அமரன் படம் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.
அதேபோல் படத்திற்கு நேற்று வரை அதாவது நவம்பர் 3ஆம் தேதி வரை பல திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே இருந்தது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது தொய்வில்லாமல் அமைந்தது. அதன்படி பார்த்தால், படம் நான்கு நாட்களில் சுமார் ரூபாய் 130 கோடிகளில் இருந்து ரூபாய் 135 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
முதல் நான்கு நாட்களில் படம் இந்தத் தொகையை வசூல் செய்திருப்பதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ஏற்கனவே குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதால், இன்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். படம் விரைவில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்யும் என்ற பேச்சும் அடிபடுகின்றது. ”