சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா பரப்பரப்பு குற்றச்சாட்டு
சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.
கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் செவ்வாயன்று குற்றம் சாட்டியது.
இதற்கு இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை,
ஆனால் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்தது, எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
ஏற்கனவே, இந்தியா – கனடா நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல் போக்கு, இந்த செய்திகள் மூலமாக மேலும் பிளவை அதிகரிக்கவே செய்யும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி என்று இந்தியாவால் அடையாளம் கூறப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் பங்கு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு முதலே கூறியுள்ளார்.