இந்தியா செய்தி

கேரளாவில் பட்டாசு வெடி விபத்து; 150க்கும் மேற்பட்டோர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடில் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் எட்டுப் பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஞ்சோடம்பலம் வீரர்காவு ஆலயத்தின் வருடாந்த காளியாட்டம் திருவிழாவின் போது செவ்வாய்க்கிழமை (29) நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தினை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீது, இந்திய வெடிபொருள் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

காயமடைந்தவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு ஆகிய இடங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆலயத்துக்கு அருகில் உள்ள பட்டாசு ஆலையில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!