செய்தி விளையாட்டு

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் புனேயில் நடைபெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு சாதனமாக ஆடுகளத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களும், 2வது இன்னிங்சில் 255 ரன்களும் சேர்த்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்னில் சுருண்டதால், 359 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2 ஆவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோகித் சர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜெய்ஸ்வால் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் விக்கெட்டும் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் ரன்கள் வந்துகொண்டே இருந்தது.

அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் 23 ரன் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தது. ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்திருக்கும்போது சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி அடித்த பந்தில் ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனார். பண்ட் ரன் ஏதும் எடுக்காமல் 3 பந்துகளை சந்தித்த நிலையில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்ததாக விராட் கோலி 17 ரன்னிலும் சர்பராஸ் கான் 9 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் 8 ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த அஷ்வின் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்த நிலையில், சான்ட்னெர் சூழலில் அஷ்வின் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் தனியொருவனாக போராடிய ஜடேஜா 42 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய சான்ட்னெர் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 2 – 0 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது.

சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி