ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் : சவுதி அரேபியா கண்டனம்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஈரான் கடந்த 1ம் lதிகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. முழுக்க முழுக்க திட்டமிட்டு, முறையாக சர்ஜிக்கல் ஸ்டைலில் தாக்குதலை நிகழ்த்தி உள்ளது இஸ்ரேல்.
ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.
குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல். ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இஸ்ரேலிய நாட்டின் தாக்குதலுக்கு எங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம். மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில். உறுதியான நிலைப்பாட்டை நாடுகள் எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது