ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் மோதி கோர விபத்து!
ஆஸ்திரேலியா – சிட்னியின் தென்மேற்கே வனப்பகுதியில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலிய போலீஸ், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர், சிட்னியில் இருந்து தென்மேற்கே 55 மைல் தொலைவில் உள்ள பகுதியில் இருந்த உடல்களை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையின் செயல் கண்காணிப்பாளர் திமோதி கால்மன் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்கான காரணத்தை அறிய ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தால் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





